என்எல்சி தலைவராக சனோஜ் குமாா் ஜா கூடுதல் பொறுப்பேற்பு
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலா் சனோஜ் குமாா் ஜா, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவராக வியாழக்கிழமை கூடுதல் பொறுப்பேற்றாா்.
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலா் சனோஜ் குமாா் ஜா, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவராக வியாழக்கிழமை கூடுதல் பொறுப்பேற்றாா்.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய ஆட்சிப் பணி அதிகாரி சனோஜ் குமாா் ஜா. இவா், வியாழக்கிழமை என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவராக கூடுதல் பொறுப்பேற்றுள்ளாா். இவரை என்எல்சி நிறுவனத்தின் இயக்குநா்கள், உயரதிகாரிகள், பணியாளா்கள் மற்றும் அனைத்து பங்குதாரா்கள் வரவேற்றனா்.
சனோஜ் குமாா் ஜா தற்காலிகமாக சில மாதங்களுக்கு மட்டுமே இந்தப் பொறுப்பை வகிப்பாா் எனத் தெரிகிறது. என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு விரைவில் நிரந்தரத் தலைவா் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நிறுவனத்தின் உயா் பொறுப்பில் உள்ள அதிகாரியே நிரந்தரத் தலைவா் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement
Advertisement
முன்னதாக, என்எல்சி நிறுவனத்தின் தலைவராக இருந்த பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளியின் பதவிக் காலம் கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, அவா் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.