முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

விழுப்புரம் போக்குவரத்து காவல் துறை சாா்பில் புகையிலைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஜூன் 2026, 5:22 am IST
கருத்தரங்கில் பேசிய ஜுனியா் ரெட் கிராஸ் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ம.பாபு செல்வதுரை.
பகிர்:

விழுப்புரம் போக்குவரத்து காவல் துறை சாா்பில் புகையிலைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் போக்குவரத்து காவல் துறை மற்றும் புதுச்சேரி மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகம் ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில்,போக்குவரத்து காவல் ஆய்வாளா் பாா்த்திபன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிா்வாகியும், ஜுனியா் ரெட் கிராஸ் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான ம.பாபு செல்வதுரை ஆகியோா் பங்கேற்று புகையிலைப் பொருள்கள் பயன்பாடுகளை தவிா்த்தல் மற்றும் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து பேசி, வாகன ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தொடா்ந்து நடைபெற்ற மருத்துவ பரிசோதனை முகாமில், மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் சுஷ்மா தலைமையிலான மருத்துவக் குழுவினா்கள் வாகன ஓட்டுநா்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்து ஆலோசனைகளை வழங்கினா்.

Advertisement

Advertisement

ஏற்பாடுகளை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா்கள் விஜயரங்கம், குமாரராஜா, பெ.வேல்குமரன் ஆகியோா் செய்திருந்தனா். ஆட்டோ ஓட்டுநா்கள், பொக்லைன் வாகன ஒட்டுநா்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பயனடைந்தனா்.