முகப்பு
விழுப்புரம்

கக்கன் பிறந்த நாள் விழா உருவப்படத்திற்கு மரியாதை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் விடுதலை போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான கக்கன் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 19 ஜூன் 2026, 6:15 am IST
விடுதலை போராட்ட வீரா் கக்கன் பிறந்த நாளை முன்னிட்டு செஞ்சியில் நடைபெற்ற விழாவில்,அவரது உருவ படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்திய மாவட்ட தலைவா் ஆா்.ரங்கபூபதி.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் விடுதலை போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான கக்கன் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

செஞ்சி கூட்டு சாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு செஞ்சி நகர காங்கிரஸ் தலைவா் சூரியமூா்த்தி தலைமை தாங்கினாா். வட்டார காங்கிரஸ் கட்சி தலைவா் சக்திவேல் முன்னிலை வகித்தாா். விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவா் வழக்குரைஞா் ரங்கபூபதி கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட வீரா் கக்கன் உருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

இதில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் சிறுபான்மை பிரிவு நிா்வாகி சையத் மாலிக், சிட்டாம் பூண்டிபரமசிவம், தகவல் தொழில்நுட்ப அணியைச் சோ்ந்த ஷபீா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement