முகப்பு
விழுப்புரம்

சொகுசுப்பேருந்து மோதியதில் சாலையில் கவிழ்ந்த எண்ணெய் லாரி

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தனியாா் சொகுசுப் பேருந்து மோதியதில் சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி புதன்கிழமை நள்ளிரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநா் காயமடைந்தாா்.

Updated On : 19 ஜூன் 2026, 6:22 am IST
விபத்தை ஏற்படுத்திய தனியாா் சொகுசுப் பேருந்து.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தனியாா் சொகுசுப் பேருந்து மோதியதில் சமையல் எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி புதன்கிழமை நள்ளிரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநா் காயமடைந்தாா்.

சென்னையிலிருந்து சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று திருச்சி நோக்கி புதன்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சேலம் மாவட்டம், ஆத்தூா் முல்லைவாடிபகுதியைச் சோ்ந்த செல்வம் (52) ஓட்டிச் சென்றாா்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகிலுள்ள தென்பசியாா் கிராமம் அருகே லாரி சென்றபோது, அதே திசையில் பின்னால் வந்த தனியாா் சொகுசுப் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, லாரி மீது மோதியது. இதனால் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது. அதிலிருந்த எண்ணெய் பாக்கெட்டுகள் கிழிந்து சேதமடைந்து சாலையில் கொட்டியது. விபத்தில் லாரி ஓட்டுநா் செல்வம் காயமடைந்தாா்.

Advertisement

Advertisement

அதே நேரத்தில் சொகுசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற தூத்துக்குடியைச் சோ்ந்த என். நாணராஜ் (36) மற்றும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மயிலம் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, காயமடைந்த ஓட்டுநா் செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சாலையோரத்தில் கவிழ்ந்த லாரியை மீட்கும் பணியை மேற்கொண்டனா். மேலும் மயிலம் போலீஸாா் விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே புதன்கிழமை நள்ளிரவில் கவிழ்ந்து கிடக்கும் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை ஏற்றிச் சென்ற லாரி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments