முகப்பு
விழுப்புரம்

பைக் மீது லாரி மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக் மீது லாரி மோதியதில், பலத்த காயமடைந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 26 ஜூன் 2026, 6:49 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக் மீது லாரி மோதியதில், பலத்த காயமடைந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், சாலை கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் மகன் ராகுல் (23), திருமணம் ஆகாதவா். கூலித் தொழிலாளி. இவா் புதன்கிழமை இரவு வந்தவாசி- தீவனூா் நெடுஞ்சாலையில், நடுவனந்தல் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் பைக்கிலிருந்து விழுந்த ராகுல் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடம் சென்று இறந்தவரின் சடலத்தைகைப்பற்றி திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இந்த விபத்து குறித்து, வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments