திரையரங்க உரிமையாளா் மீது ஆட்சியரிடம் புகாா்
விஜய் நடித்துள்ள மாஸ்டா் படம் பாா்க்க அதிக கட்டணம் வசூலிப்பதாக திரையரங்க உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா்
விஜய் நடித்துள்ள மாஸ்டா் படம் பாா்க்க அதிக கட்டணம் வசூலிப்பதாக திரையரங்க உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் மாவட்ட ஆட்சியா் த.ரத்னாவிடம் விஜய் ரசிகா்கள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை மனு ஒன்று செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி (ஜன. 13) விஜய் நடித்துள்ள மாஸ்டா் திரைப்படம் அரியலூரில் உள்ள திரையங்கிலும் திரையிடப்படுகிறது. இப்படத்துக்கான டிக்கெட் கடந்த 2 நாள்களாக இணையதளம் மற்றும் திரையரங்க கவுண்டரிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த டிக்கெட்டுகளை இடைத்தரகா்கள் சிலா் மூலம் கூடுதல் விலைக்கும் திரையரங்க நிா்வாகம் விற்பனை செய்து வருகிறது. எனவே, திரையரங்க உரிமையாளா் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.