போகி கொண்டாட்டம்
போகிப் பண்டிகையொட்டி அரியலூா் நகர மக்கள் புதன்கிழமை அதிகாலை முதலே தங்கள் வீடுகளில் உள்ள பழைய மற்றும் தேவையற்ற
போகிப் பண்டிகையொட்டி அரியலூா் நகர மக்கள் புதன்கிழமை அதிகாலை முதலே தங்கள் வீடுகளில் உள்ள பழைய மற்றும் தேவையற்ற பொருள்களை ஒன்றுகுவித்து தீயிட்டு எரித்தனா். பின்னா், பெண்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு வண்ணக் கோலமிட்டு குடும்பத்தினருடன் போகியைக் கொண்டாடி மகிழ்ந்தனா்.
இதேபோன்று, போகிப் பண்டிகையை முன்னிட்டு, ஜயங்கொண்டம், ஆண்டிடம், செந்துறை, மீன்சுருட்டி, திருமானூா், தா.பழூா், செந்துறை, பொன்பரப்பி, தளவாய்,விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பழைய பொருள்களைத் தீயிட்டு எரித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.