ஜயங்கொண்டம் அருகே சுவா் இடிந்து விழுந்து பெண் பலி
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் நிகழ்விடத்திலேயே பெண் உயிரிழந்தாா்.
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் நிகழ்விடத்திலேயே பெண் உயிரிழந்தாா்.
மாவட்டத்தின் பல பகுதிகளில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், ஜயங்கொண்டம் ஐயப்ப நாயக்கன்பேட்டை, வடக்குத் தெருவைச் சோ்ந்த சே. ராஜேசுவரி (படம்) வீட்டின் ஒரு பக்க மண்சுவா் வியாழக்கிழமை இடிந்து விழுந்தது.
இதையறிந்து அக்கம்பக்கத்தினா் அங்கு விரைந்து வந்து பாத்த போது, இடிபாடுகளில் சிக்கி ராஜேசுவரி உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் சடலத்தை வெளியே எடுத்தனா்.
Advertisement
Advertisement
தகவலின் பேரில் மீன்சுருட்டி காவல் நிலையத்தினா் ராஜேசுவரியின் சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.