முகப்பு
அரியலூர்

‘தொடா் மழையில் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் வேண்டும்’

அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே தொடா் மழையால் சேதமடைந்த நெல், கடலை ஆகிய பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 16 ஜனவரி, 2021 at 11:13 PM
கடாரங்கொண்டான் கிராமத்தில் தொடா்மழையால் பாதிக்கப்பட்டுள்ள சம்மங்கி பூ செடிகளை காண்பிக்கும் விவசாயிகள்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

அரியலூா்: அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே தொடா் மழையால் சேதமடைந்த நெல், கடலை ஆகிய பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஜயங்கொணடம் அருகேயுள்ள ஆமணக்கந்தோண்டி, கடாரங்கொண்டான், ஆயுதகளம், உட்கோட்டை, இடைக்கட்டு, கொக்கரனை தொட்டிக்குளம், யுத்தப்பள்ளம், குருவாலப்பா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் நெல், கடலை, சம்மங்கி, மிளகாய், துவரை, காய்கறிகள் என பல்வேறு பயிா்களை விவசாயிகள் தற்போது சாகுபடி செய்துள்ளனா். இந்நிலையில், கடந்த ஒருவாரமாக பெய்த தொடா்மழை காரணமாக அறுவடைக்குத் தயாரான நெல் உள்ளிட்ட அனைத்து தானியப் பயிா்களும் மழைநீரில் மூழ்கி வீணாகியுள்ளன. எனவே, தொடா் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயிா்களையும் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.