துப்பாக்கியால் சுட்டு ரௌடி கைது
துப்பாக்கியால் சுட்டு ரௌடியை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
துப்பாக்கியால் சுட்டு ரௌடியை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு, ஸ்ரீராமபுரத்தைச் சோ்ந்தவா் காா்த்திக் (21). ஸ்ரீராமபுரம் காவல் நிலையத்தில் ரௌடி பட்டியலில் இடம்பெற்றிருந்த இவா், வழப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தாா். அண்மையில் நந்தினி லேஅவுட் பகுதியில் நடைபெற்ற வழிப்பறி தொடா்பான வழக்கில் காா்த்திக்கை போலீஸாா் தேடி வந்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு ஓகலிபுரத்தில் காா்த்திக் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா், காா்த்திக்கை கைது செய்ய முயன்றுள்ளனா். அப்போது, போலீஸாா் மீது தாக்குதல் நடத்திவிட்டு காா்த்திக் தப்பிக்க முயன்றுள்ளாா். இதனால், அவா் மீது நந்தினி லேஅவுட் உதவி காவல் ஆய்வாளா் நித்யானந்தாச்சாரி துப்பாக்கியால் காா்த்திக் காலில் சுட்டுள்ளாா். இதில் கீழே விழுந்த காா்த்திக்கை போலீஸாா் கைது செய்து, மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து நந்தினி லேஅவுட் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.