இன்றைய செய்திகள் ஜூலை 7 - நேரலை
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.
ரீல்ஸ் வாடிக்கையாகிவிட்டது
அமைச்சர்கள் ரீல்ஸ் போடுவது வாடிக்கையாகிவிட்டது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது
கரூர் செல்லவிடாமல் முதல்வர் ஜோசப் விஜய்யை திமுக இன்றுவரை தடுத்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
அமைச்சர்கள் தேவையின்றி...
அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது என்று முதல்வர் அலுவலகம் அறிவுறுத்தியிருப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
தங்கம் விலை குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 7) சவரனுக்கு ரூ. 1,280 குறைந்துள்ளது.
பங்குச்சந்தை உயர்வு
பங்குச்சந்தைகள் தொடர்ந்து 4 நாள்களாக உயர்வுடன் நிறைவடைந்த நிலையில் இன்றும் (ஜூலை 7) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.
தண்டவாளத்தில் சேதம்
சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் கீர்த்தனா பதில்
பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது மாணவியிடம் அமைச்சர் கீர்த்தனா ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பியது விமர்சனங்களுக்குள்ளான நிலையில் அதுதொடர்பாக அவர் பதிலளித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.