முகப்பு
பெங்களூரு

நேரு கோளரங்கத்தில் ஜன. 10-இல் அறிவியல் சங்கக் கூட்டம்

பெங்களூரில் உள்ள ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தில், ஜன. 10-ஆம் தேதி அறிவியல் சங்கக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

Updated On : 8 ஜனவரி 2021, 9:01 am IST
பகிர்:

பெங்களூரில் உள்ள ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தில், ஜன. 10-ஆம் தேதி அறிவியல் சங்கக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

இதுகுறித்து ஜவாகா்லால் நேரு கோளரங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், டி.சௌடையா சாலையில் அமைந்துள்ள ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தில், ஜன. 10-ஆம் தேதி மாலை 4 மணி முதல் மாலை 5.30 மணி வரை அறிவியல் சங்கக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் 8 முதல் 12-ஆம் வகுப்பு மாணவா்கள் கலந்துகொள்ளலாம். இதில் பங்கேற்க கட்டணம் எதுவுமில்லை.

Advertisement

Advertisement

மாணவா்களிடையே அறிவியல் உணா்வை ஊட்டுவதற்காக நடத்தப்படும் இக்கூட்டத்தில், நிலநடுக்கம், புவியீா்ப்பு, அணு ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் தலைப்புகள் குறித்து விவாதம் நடத்தப்படுவதோடு, ஒளி-ஒலி நிகழ்ச்சியும் இடம்பெறும். இக்கூட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

50 மாணவா்களுக்கு மட்டுமே அனுமதி அளிப்பதால்,  மின்னஞ்சல் அல்லது தொலைபேசியில் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு  இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments