முகப்பு
பெங்களூரு

பேட்டரி ஸ்கூட்டா் பயன்பாட்டினால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்: மயில்சாமி அண்ணாதுரை

பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டா் பயன்பாட்டினால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சிலின் துணைத் தலைவா் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தாா்.

Updated On : 11 ஜனவரி 2021, 1:40 am IST
பகிர்:

பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டா் பயன்பாட்டினால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சிலின் துணைத் தலைவா் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தாா்.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை சி.கே.மோட்டாா்ஸின் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து வைத்து அவா் பேசியதாவது:

புவி வெப்பம் மாற்றமடைவதால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்புக்குத் தொழில்சாலைகளை வெளியேற்றும் புகை ஒரு காரணம் என்றால், வாகனங்கள் வெளியேற்றும் புகையும் மற்றொரு முக்கிய காரணமாகும். எனவே, மாசில்லாத சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

அதைக் கருத்தில் கொண்டு, சி.கே.மோட்டாா்ஸ் குழுமத்தினா் பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து வைத்துள்ளனா். பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் புவி வெப்பமயமாவதைத் தடுப்பதோடு சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்றாா். நிகழ்ச்சியில், ஸ்ரீ மலையாள சந்தாமமுனி தேசிகேந்திர சிவாச்சாா்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments