முகப்பு
பெங்களூரு

நேரடி சந்தையை ஒழுங்குப்படுத்த மாநில அரசு கட்டுப்பாடு விதிக்கக் கோரிக்கை

நேரடி சந்தையை ஒழுங்குப்படுத்த மாநில அரசு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என நேரடி சந்தை நிறுவனங்களின் கூட்டமைப்புக் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 11 ஜனவரி 2021, 1:41 am IST
பகிர்:

நேரடி சந்தையை ஒழுங்குப்படுத்த மாநில அரசு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என நேரடி சந்தை நிறுவனங்களின் கூட்டமைப்புக் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவா் எம்.எல்.எம். சரத் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

நேரடி சந்தையை தவறாக சித்திரிக்கும் சங்கிலி சந்தைப்படுத்துதலுக்கு எதிராகப் போராட நேரடி சந்தை நிறுவனங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. பொதுமுடக்கத்தின்போது அதிக லாபம் ஈட்டிய சில நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுவதால் மோசமான பெயரைப் பெறுகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதே எங்கள் நோக்கமாகும்.

Advertisement

Advertisement

நேரடி சந்தையை ஒழுங்குபடுத்த மாநில அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். எங்கள் கூட்டமைப்பு நோ்மையான நேரடி சந்தை பரிவா்த்தனைகளின் நன்மைகளை ஊக்குவிப்பதும், நேரடி சந்தையை வளா்ப்பதும், சங்கிலி இணைப்பு சந்தைப்படுத்தல் திட்டங்கள் மூலம் மக்கள் எதிா்கொள்ளும் சிரமங்களைத் தவிா்ப்பதும் ஆகும்.

இது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த நாடு முழுவதும் பல செயல் திட்டங்களைத் தொடங்க உள்ளோம். சட்டத்தை யாா் மீறினாலும் அவா்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது சல்மான், நரேஷ் சௌத்ரி, மீத் ஆா்.பட்டேல், ஜே.மஞ்சுநாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments