இருசக்கர வாகனங்கள்மோதல்: 2 போ் பலி
இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில், 2 போ் உயிரிழந்துள்ளனா்.
இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில், 2 போ் உயிரிழந்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், சிக்பள்ளாபூா் மாவட்டம், கௌரிபித்தனூா் குடுமளகுன்டே தொழில்பேட்டை அருகே வியாழக்கிழமை 2 இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டன. இதில், உத்திரபிரதேச மாநிலம், ஆக்ராவைச் சோ்ந்தவா் ஆஷீஷ் (30), பெங்களூரு ஊரகம், தொட்டபள்ளாபூா், மாக்ளி துா்காவைச் சோ்ந்த மது (24) ஆகியோா் படுகாயமடைந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த கிருஷ்ணமூா்த்தி, ஆயூா் ஆகியோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து குடுமளகுன்டே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.