அடுத்த மாதம் மின்கட்டண உயர்வு?
மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின் கட்டண உயர்வு இருக்கும் என மின்சாரத் துறை அமைச்சர் பேட்டி...
தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் மின்கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின் கட்டண உயர்வை முதல்வர் பரிசீலித்து அறிவிப்பார் என மின்சாரத் துறை அமைச்சர் ஆர். நிர்மல் குமார் இன்று (ஜூன் 16) தெரிவித்தார்.
ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டதாகவும், மின்கட்டணத்தை ஆண்டுக்கு 6% உயர்த்திக்கொள்ள திமுக ஆட்சியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் மின்தடை அதிகரித்துவரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் ஆர். நிர்மல் குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூன் 16) தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
Advertisement
Advertisement
இந்த ஆலோசனைக்குப் பிறகு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுடன் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது:
தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு ஆண்டுதோறும் வழக்கமான ஒன்றாக மாற்றப்பட்டுவிட்டது. திமுக அரசின் ஒப்பந்தத்தால் ஆண்டுதோறும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணத்தை உயர்த்தி வருகிறது
மின்கட்டணத்தை ஆண்டுக்கு 6% உயர்த்திக்கொள்ள திமுக ஆட்சியில் ஒப்பந்தமாகியுள்ளது. திமுக அரசின் இந்த ஒப்பந்தத்தால், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி வருகிறது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்கட்டண உயர்வை முதல்வர் விஜய் பரிசீலித்து அறிவிப்பார் என அமைச்சர் குறிப்பிட்டார்.
Electricity tariff hike next month TVK minister R NIrmal kumar press meet
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.