முகப்பு
பெங்களூரு

இருசக்கர வாகனத் திருட்டு வழக்கு: ஒருவா் கைது

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 3.50 லட்சம் மதிப்புள்ள 4 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

Updated On : 16 ஜனவரி 2021, 7:01 am IST
பகிர்:

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 3.50 லட்சம் மதிப்புள்ள 4 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, ஞானபாரதி காவல் சரகத்தில் கடந்த செப். 28-ஆம் தேதி இருசக்கர வாகனம் ஒன்று திருட்டு போனது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், சம்பத் என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள 4 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். விசாரணையில், விஜய நகா், மாகடி சாலை, ஞானபாரதி காவல் சரகங்களில் அவா் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சம்பத்திடம் ஞானபாரதி போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.