ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கினால் மோசமான பின்விளைவுகளைச் சந்திக்கக் கூடும்: டிரம்ப் எச்சரிக்கை!
ஈரான் மீண்டும் அணு ஆயுதத்தை உருவாக்கினால் மோசமான பின்விளைவுகளைச் சந்திக்கக் கூடும் என்று டிரம்ப் விடுத்த எச்சரிக்கை பற்றி...
ஈரான் மீண்டும் அணு ஆயுதத்தை உருவாக்கினால் மோசமான பின்விளைவுகளைச் சந்திக்கக் கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படாததால் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டியதாக டிரம்ப் நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில், இறுதி ஒப்பந்தமானது வரும் ஜூன் 19 ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாகும் என்று இந்த விவகாரத்தில் தொடர்ந்து மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இந்த அமைதி ஒப்பந்தம் இறுதியானது குறித்து டொனால்ட் டிரம்ப் பேசியதாவது:
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்கப் போவதில்லை என்பதுதான் எனக்கு உண்மையிலேயே முக்கியமான ஒரே விஷயம். இதை அவர்கள் சத்தமாகவும் தெளிவாகவும் சொல்லிவிட்டனர். இனிமேல் அணு ஆயுதத்தை அவர்கள் உருவாக்கப் போவதில்லை. அதை அவர்கள் வாங்கப் போவதும் இல்லை. அணு ஆயுதத்துடன் அவர்கள் எதுவுமே செய்யப் போவதில்லை. ஒருவேளை, அவர்கள் அதைச் செய்தால் மோசமான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
அதன் பின்விளைவுகளை நான் உங்களிடம் கூற மாட்டேன். அப்படி இருந்தபோதிலும், அவர்களுடன் ஒரு மிக நல்ல உறவு இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்களிடம் அணு ஆயுதம் இருக்காது. அதற்காகத்தான் நான் உள்ளே வந்தேன். அதற்காகத்தான் நான் கையெழுத்திட ஒப்புக்கொண்டேன் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
US President Donald Trump warned on Tuesday (June 16) that Iran could face severe consequences if it develops nuclear weapons again.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.