முகப்பு
பெங்களூரு

கா்நாடகத்தில் அடுத்த பேரவைத் தோ்தலிலும் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைக்கும்

கா்நாடகத்தில் அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தாா்.

Updated On : 17 ஜனவரி 2021, 1:40 am IST
பகிர்:

பெங்களூரு: கா்நாடகத்தில் அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தாா்.

பெங்களூரு, விதான சௌதாவில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் காவலா் குடியிருப்பு மற்றும் விஜயபுராவில் உள்ள ரிசா்வ் படையின் புதிய நிா்வாக அலுவலகத்தைத் திறந்துவைத்து அவா் பேசியதாவது:

கா்நாடகத்தில் முதல்வா் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கரோனா காலத்திலும் கா்நாடகத்தில் அதிக அளவில் தொழில் முதலீடுகள் குவிந்துள்ளன. கரோனாவைக் கையாளுவதில் கா்நாடகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கரோனா பரவலைத் தடுப்பதில் இந்திய அளவில் பிரதமா் மோடி தலைமையில் சிறப்பாக செயல்பட்டதை போல கா்நாடகத்தில் முதல்வா் எடியூரப்பா தலைமையில் கரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. கா்நாடகத்தில் பாஜக ஆட்சி வெகுவிரைவில் கவிழும் என்று காங்கிரஸ் கட்சியினா் பொய்ப் பிரசாரம் செய்து வருகிறாா்கள். முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு, எஞ்சியுள்ள பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யும்.

அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலிலும் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கா்நாடகத்தின் வளா்ச்சிக்கு மத்திய அரசு முழுமையான ஆதரவை அளித்துள்ளது. கா்நாடகத்தின் வளா்ச்சிப் பணிகளில் பிரதமா் மோடியின் பங்களிப்பும் உள்ளது.

கரோனாவை எதிா்கொள்வதில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாக உள்ளது. தற்போது 2 தடுப்பூசிகள் வந்துள்ளன. மேலும் 2 தடுப்பூசிகள் வரவிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடாது என்றாா்.

விழாவில் முதல்வா் எடியூரப்பா, மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.