முகப்பு
வணிகம்

செபி (திருத்த) மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது

பங்குச் சந்தை பரிமாற்று வாரிய (திருத்த) மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கு மூலம் திங்கள்கிழமை

Updated On : 12 மார்ச் 2013, 3:21 am IST
பகிர்:

பங்குச் சந்தை பரிமாற்று வாரிய (திருத்த) மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கு மூலம் திங்கள்கிழமை நிறைவேறியது.

பங்குச் சந்தைகள் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் (எஸ்.ஏ.டி.) தலைவரை நியமிப்பதற்கான விதிமுறைகளில் திருத்தம் செய்ய இந்த மசோதா வகை செய்கிறது. இதன்படி, உயர்நீதிமன்ற நீதிபதியாக 7 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களை தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்க இந்த மசோதா வகை செய்கிறது.

இப்போது உள்ள நடைமுறைப்படி, பதவியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது உயர் நீதிமன்ற நீதிபதியை மட்டுமே தலைவராக நியமிக்க முடியும். ஆனால், இத்தகை நபரை அடையாளம் காண்பதில் சிரமம் இருப்பதால், இந்த பதவி கடந்த ஓராண்டாக காலியாக உள்ளது.

Advertisement

Advertisement

பங்குச் சந்தை பரிமாற்று வாரியம் (செபி) வழங்கும் உத்தரவை எதிர்க்கும் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கான அமைப்புதான் எஸ்.ஏ.டி. என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.