சென்னை, புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
சென்னை, புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது குறித்து....
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் வெளியிடும் டெல்டா வெதர்மேன் என்றழைக்கப்படும் ஹேமச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது:
”தென்மேற்கு பருவமழை தொய்வடைந்து காணப்படுகிறது. தமிழ்நாட்டின் கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் நேற்று இரவு மழைப் பதிவாகியுள்ளது.
Advertisement
Advertisement
இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் மாலை/இரவு வெப்பச்சலன இடியுடன் கூடிய மழையை எதிர்ப்பார்க்கலாம்.
குறிப்பாக ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஆங்காங்கே இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
ஜூன் 16 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்.
பகலில் மழை வாய்ப்பு இல்லை, மழைபொழிவானது மாவட்டம் முழுதும் பரவலாக இருக்காது. மழையின்போது வலுவான இடி, மின்னலும், மழைக்கு முன்பு தரைக்காற்றும் வீசும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
'Delta Weatherman' Hemachandran has stated that there is a possibility of thunderstorms accompanied by rain in Chennai and its suburbs during the night.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.