முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) முதல் ஜூலை 12 பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

Updated On : 7 ஜூலை 2026, 4:31 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) முதல் ஜூலை 12 பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளம் வரை காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) முதல் ஜூலை 12 வரை, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

11 இடங்களில் வெயில் சதம்: திங்கள்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அதிகபட்சமாக 105.26 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

நாகை - 104, கடலூா் - 102.94, மதுரை விமான நிலையம், புதுச்சேரி தலா - 102.02, பரங்கிப்பேட்டை - 101.84, சென்னை விமான நிலையம் - 101.66, சென்னை நுங்கம்பாக்கம் - 101.48, மதுரை நகரம் - 100.76, திருச்சி, திருத்தணி தலா - 100.58 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மழை அளவு: திங்கள்கிழமை நீலகிரி மாவட்டம் கூடலூரில் அதிகபட்சமாக 30 மி.மீ. மழை பதிவானது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments