முகப்பு
வணிகம்

பங்குச் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ. 1.4 லட்சம் கோடி முதலீடு

கடந்த நிதி ஆண்டில் இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ. 1,39,408 கோடி மதிப்பிலான முதலீடு

Updated On : 2 ஏப்ரல் 2013, 12:36 am IST
பகிர்:

கடந்த நிதி ஆண்டில் இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ. 1,39,408 கோடி மதிப்பிலான முதலீடு செய்துள்ளன.

இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வது 1992-1993 ஆண்டு முதல் அனுமதிக்கப்பட்டது. அந்த ஆண்டு ரூ. 13 கோடி அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்டன. அதன் பிறகு, ஒரே ஆண்டில் மிக அதிகமான அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது கடந்த நிதி ஆண்டில்தான்.

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் (செபி) திங்கள்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி, 2012-2013 நிதி ஆண்டில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 1,39,408 கோடியை முதலீடு செய்துள்ளன. இந்தியாவில் பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதையே முதலீடுகள் அதிகரித்திருப்பது சுட்டிக் காட்டுகிறது.

Advertisement

Advertisement

2013-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் ரூ. 55 ஆயிரம் கோடிக்கு மேல் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளன. 1992-ஆம் ஆண்டு முதல் ஒட்டுமொத்தமாக ரூ. 6.3 லட்சம் கோடியை பங்குச் சந்தையிலும், ரூ. 1.68 லட்சம் கோடியை கடன் பத்திரங்களிலும் இந்நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. 2013-ஆம் ஆண்டு மார்ச் இறுதி வரை 1,765 பதிவு பெற்ற நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.