முகப்பு
வணிகம்

கார் விற்பனை சரிவு

கடந்த மே மாதத்தில் மாருதி சுசூகி இந்தியா, டொயோட்டா கிர்லோஸ்கர், டாடா ஆகிய முன்னணி நிறுவனங்களின் உள்நாட்டு கார் விற்பனை சரிந்துள்ளது. எனினும், ஹோண்டா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்களின் கார் விற்பனை அதிகரித்துள்ளது.

Updated On : 2 ஜூன், 2013 at 12:32 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

கடந்த மே மாதத்தில் மாருதி சுசூகி இந்தியா, டொயோட்டா கிர்லோஸ்கர், டாடா ஆகிய முன்னணி நிறுவனங்களின் உள்நாட்டு கார் விற்பனை சரிந்துள்ளது. எனினும், ஹோண்டா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்களின் கார் விற்பனை அதிகரித்துள்ளது.

மே மாதத்தில் உள்நாட்டு கார் விற்பனை 13 சதவீதம் குறைந்து 77,821 ஆக இருந்ததாக மாருதி சுசூகி நிறுவனம் கூறியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இது 89,478 ஆக இருந்தது. இதே காலத்தில் டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் உள்நாட்டு கார் விற்பனை 10,023 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு மே மாதத்தின் விற்பனையான 15,501ஐவிட 35.33 சதவீதம் குறைவு.

ஹூண்டாய் கார் விற்பனை 0.3 சதவீதம் அதிகரித்து 32,102 ஆக இருந்தது. ஹோண்டா கார் விற்பனை 9.8 சதவீதம் அதிகரித்து 11,342 ஆக இருந்தது. ஜெனரல் மோட்டார்ஸ் கார் விற்பனை 39.82 சதவீதம் அதிகரித்து 8,500 ஆக இருந்தது. செவர்லே செயில் மற்றும் செவர்லே என்ஜாய் ஆகிய புதிய கார்கள் விற்பனை அதிகரித்ததே இந்த உயர்வுக்குக் காரணம். ரெனால்ட் கார் விற்பனை 13 மடங்கு அதிகரித்தது. ஃபோர்டு கார் விற்பனை 33.69 சதவீதம் குறைந்து 4,002 ஆக இருந்தது.

Advertisement

மஹிந்திரா அன்ட் மஹிந்திரா கார் விற்பனை 5.4 சதவீதம் அதிகரித்து 42,104 ஆக இருந்தது. டாடா நிறுவனத்தின் கார் விற்பனை 45.69 சதவீதம் சரிந்து 11,134 ஆக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.