சால்மன் மீன்கள் சென்னையில் கிடைக்குமா? தமிழ்ப் பெயர் இதுவா?
சால்மன் மீன்கள் சென்னையில் கிடைக்கும் இடங்கள் மற்றும் அதன் தமிழ் பெயர் பற்றி..
சால்மன் மீன்களைப் பற்றி இணையத்தில் பல விடியோக்களைப் பார்த்திருப்போம். ஆனால், இந்தியாவில் அவை எங்கு கிடைக்கும், அதற்கு என்னப் பெயர் என்று தேடிப் பார்த்தால் பெரிய அளவில் பதில்கள் கிடைக்கப் பெறாது.
காரணம், சால்மன் மீன்கள், பொதுவாகவே வட அமெரிக்க கடற்கரைப் பகுதிகளில் அதிகம் கிடைக்கும் ஒரு வகை மீன். இவை குளிர்ந்த நீரில் வாழும் என்பதால்தான் இந்தியக் கடலோரங்களில் இதே வகை மீன்கள் கிடைப்பதில்லை. எனவே இவற்றுக்கு இந்தியப் பெயர்களோ தமிழ்ப் பெயர்களோ இல்லை.
பசிபிக், அட்லாண்டிக் பகுதிகளில் காணப்படும் மீன்கள்தான் உண்மையான சால்மன் மீன்கள். இந்த வகை மீன்கள் கடலில் வாழ்ந்தாலும், நன்னீர்களைத் தேடி வந்து முட்டையிட்டு குஞ்சுகளைப் பொரிக்கின்றன. குஞ்சுகள் மீனாக வளர்ந்ததும் அவை கடலுக்கு வருகின்றன.
Advertisement
Advertisement
இந்தியாவில் சால்மன் மீன் கிடைக்குமா?
இந்தியாவில் இந்த வகை மீன்கள் பெரிய அளவில் மீன் சந்தைகளுக்கு வருவதில்லை. எனினும், சென்னையில் சால்மன் வகை மீன்கள் கிடைக்கின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் சால்மன் மீன் கிடைக்கும் இடங்கள்
அதாவது, வடபழனியில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகத்தின் கீழ் தளத்தில் இயங்கில் ஒரு சில கடைகளிலும், அடையாறு அருகே உள்ள வணிக வளாகத்தின் கடைகளிலும் அமெரிக்காவின் சால்மன் வகை மீன்கள் கிடைக்கின்றனவாம். ஆனால் விலைதான் சற்று அதிகம். சில நாள்களில் இது ஒரு கிலோ ரூ.1,600 முதல் ரூ.2,000 வரை விற்பனையாகுமாம்.
மேலும் சிலர் கூறுவது என்னவென்றால், காசிமேடு மீன் சந்தையில் சில மீனவர்கள், வெளிநாடுகளிலிருந்து வெளிநாட்டு மீன்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதாகவும், அவர்களிடம் கேட்டால் நிச்சயம் சால்மன் மீன் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள். உண்மை நிலவரம் என்ன? இப்போதும் கிடைக்கிறதா என்பது பற்றி தெரியவரவில்லை.
சால்மன் மீன் ஏன் அதிகம் தேடப்படுகிறது?
சால்மன் மீனில்:
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
உயர்தர புரதச்சத்து
வைட்டமின் D
வைட்டமின் B12
போன்ற முக்கிய சத்துகள் நிறைந்துள்ளன. இதய ஆரோக்கியம் மற்றும் மூளை செயல்பாட்டிற்கு உதவுவதாகக் கருதப்படுவதால் பலரும் இதை விரும்புகின்றனர்.
தற்போது சால்மன் மீன் வகைகளின் மருத்துவ குணங்களுக்காக பலரும் அதனை தேடித் தேடி வாங்குவதால், உலகின் பல நாடுகளிலும் சால்மன் வகை மீன்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டு மீன் பண்ணைகளில் வளர்த்து விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன, இவை மிகப்பெரிய நட்சத்திர உணவகங்களுக்கு நேரடியாக விற்கப்பட்டுவிடுவதாகவும் கூறுகிறார்கள்.
சென்னையைத் தவிர்த்து பெங்களூரிலும் அட்லாண்டிக் சால்மன் மீன்கள் கிடைக்கின்றனவாம். இவ்வளவு செலவிட்டு, அல்லது இந்த இடங்களுக்கு எல்லாம் அலைந்து பணம் செலவிட்டு சால்மன் மீன் வாங்கி சாப்பிட விருப்பமில்லை என்றால், இந்திய சால்மன் அல்லது காலா மீன்கள் எனப்படும் கீழ் பகுதி வெள்ளை, மேலே கறுப்பு இடையில் கருப்பு புள்ளிகளைக் கொண்ட மீன்களை வாங்கலாம். இவை இந்திய சால்மான் மீன்கள் என்று அழைக்கப்படுகின்றன.
Are salmon available in Chennai? Is this the Tamil name for it?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.