FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புரட்டாசி மாதத்தில் ரூ.27,000க்கு விற்பனையான ஒரே மீன்! என்ன ஸ்பெஷல்?

புரட்டாசி மாதத்தில் ரூ.27,000க்கு விற்பனையான புலசா மீனில் என்ன ஸ்பெஷல் என்பது பற்றி..

24 செப்டம்பர் 2026, 3:56 pm IST
புலசா மீன் - video grab
பகிர்:

புதுச்சேரி ஏனாம் பகுதியில், கோதாவரி ஆற்றில் கிடைத்த புலசா மீன், ஏலத்தில் 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி, இந்த ஆண்டு அதிகபட்ச விலைக்கு விற்பனையான மீன் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது.

புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம், ஆந்திர மாநில கோதாவரி ஆற்றுப் பகுதியில் உள்ளது. கடலும் ஆறும் சேர்ந்த பகுதியில் மீனவர்கள் வலையில் அதிகமாக ஆந்திர மக்கள் உண்ணும் அரிய வகையான புலசா மீன் பிடிப்படும்.

மீன்களின் ராஜா என அந்தப் பகுதி மக்கள் புலசா மீனை அழைக்கின்றனர். அதிக சுவையும் சத்துகளும் கொண்ட இந்த மீன் பிடிபடும் போதெல்லாம் ஏலம் விடப்படும். அதிக விலைக்கு ஏலம் எடுப்பவர்கள் பாராட்டப்படுவார்கள். இதை வாங்குபவர்கள் அதிர்ஷ்டம் நிறைந்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் கடந்த 10 நாள்களில் கோதாவரி ஆற்றில் சுமார் 7 புலசா மீன்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அவை 14 ஆயிரம் முதல் 22 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையான நிலையில், தற்போது கிடைத்த புலசா மீன் 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.

மேலும், ஆயிரம் ரூபாய் கூடுதலாக சேர்த்து, இந்த மீனை 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக மீனவர் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, ஆந்திரம் என இரண்டு மாநிலங்களிலும் அசைவப் பிரியர்களிடையே புலசா மீனுக்கு தனி வரவேற்பு உள்ளது. இந்த ஆண்டு புலசா மீன்கள் அரிதாக கிடைப்பதால், அதன் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

summary

A single fish sold for ₹27,000 during the month of Purattasi! What makes it special?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments