FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மீண்டும் அமோக விற்பனை... ரூ. 26 ஆயிரத்துக்கு ஏலம்போன அரிய வகை மீன்கள்!

புதுச்சேரியில் அரிய வகை சீரா மீன்கள் ரூ. 26 ஆயிரத்திற்கு விற்பனையானது குறித்து...

27 வினாடிகள் முன்பு
வாளியில் சீரா மீன்கள் - DNS
பகிர்:

புதுச்சேரியில் ஒரு வாலி அரிய வகை சீரா மீன் ரூ. 26 ஆயிரத்திற்கு ஏலத்தில் விற்பனையானதால் ஏனாம் பகுதி மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் கோதாவரி ஆற்றில் பருவ மழையால் சீரா மீன்கள் அதிகமாக கிடைத்துள்ளது.

பழமையான நாள்களில் சீரா மீன்களை மீனவ பெண்மணிகள் சேலையில் பிடிப்பது வழக்கம். இந்த மீன்கள் அறுசுவை உடையது. உடலுக்கும் நன்மை சேர்க்கும். இந்த மீன்கள் ஆந்திரம், தெலங்கானா பகுதியில் மட்டுமே கிடைக்கின்றன.

Advertisement

Advertisement

தற்போது வடகிழக்கு பருவ மழை முன்கூட்டியே துவங்கியதால், இந்த சீரா மீன்களின் வருகை ஆந்திரம் மற்றும் தெலங்கானா பகுதியான கோதாவரி ஆற்றுப் பகுதியில் அதிகமாக கிடைத்ததுள்ளன.

சீரா மீன்கள் அளவையில் லிட்டரில் விற்கப்படுகின்றன. தற்போது அதிக அளவில் சீரா மீன்கள் கிடைத்ததால் ஒரு வாளி சீரா மீன்கள் ரூ. 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. சீரா மீன்கள் நல்ல விலையில் விற்பனை செய்யப்பட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

summary

puducherry fish market Rare fish auctioned for Rs. 26,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments