இது தெரியுமா? பறக்கும் மீன்கள் இருக்கின்றவா?
குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...
ஸெயில்ஃபின் என்ற பெயருடைய மீன் ஒன்று இருக்கின்றது. இதன் இனத்திலேயே 64 வகைகள் உள்ளன என்று சொல்கிறார்கள்.
இவை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. இன்றும் இவை வாழ்கின்றன என்பதுதான் ஆச்சரியம்.
ஆனால் இவைகளால் பறவைகளைப் போல பறக்க முடியாது. இந்த மீனின் வேகம் மிகவும் அதிகம். இதன் வால் வழக்கமான மீனின் வாலை விட மிக அதிக வேகத்தில் துடிக்கும்.
Advertisement
Advertisement
இதனால் இது முன்னோக்கிச் செல்லும்போது வேகமாக விரையும். இது வேகத்தில் செல்லும்போது நீரை விட்டு அவ்வப்போது எகிறிக் குதித்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் இது நீருக்கு மேல் அடிக்கடி ஜம்ப் செய்து செல்லும். இவற்றில் சில வகை காற்றில் 300 அடி வரைகூட ஜம்ப் செய்யும்.
இதனால்தான் இந்த வகை மீன்களைப் பறக்கும் மீன்கள் என்று அழைக்கிறார்கள்.