இது தெரியுமா? பல்லிகளால் சுவரின் கூரையில் எப்படித் தலைகீழாக நடக்க முடிகின்றது?
குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...
பல்லிகளால் சுவரின் கூரையில் எப்படித் தலைகீழாக நடக்க முடிகின்றது?
பல்லிகளின் பாதங்கள் சுவரில் அழுத்துவதால் ஏற்படும் வெற்றிடத்தால்தான் அவற்றால் சுவரில் தலைகீழாக நடக்க முடிகின்றது என்று பலரும் கூறுவார்கள். உண்மையில் அப்படியில்லை.
பல்லிகளின் பாதங்களின் உட்புறத்தில் கோடிக் கணக்கான நுண்ணிய மயிர்க்கால்கள் உள்ளன. இவற்றுக்குப் பெயர் 'ஸ்பாட்டுலே'. இந்த மயிர்கள் ஒவ்வொன்றும் 200 நானோமீட்டர் நீள, அகலம் உள்ளவை. மனித முடியின் அகலம் 1,00,000 நானோமீட்டர்கள்.
Advertisement
Advertisement
பல்லிகளின் பாதங்களில் இருக்கும் இந்த மயிர்க்கால்கள் 'வெல்க்ரோ' (செருப்புகளில் பட்டைகளை ஒட்ட வைக்க உதவும் பகுதி) போல பயன்படுவதால் பல்லிகளால் சுவரில் ஒட்டிக்கொண்டு எளிதாக நடக்க முடிகின்றது.
காற்றிலுள்ள ஈரப் பசையினால் இந்த மயிர்க்கால்களுக்குப் பசை போன்ற தன்மை கிடைப்பதும் ஒரு முக்கிய காரணம். இதைப் பற்றித் தொடர்ந்து ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் விஞ்ஞானிகள், இப்போதுள்ள செல்லோடேப்பை விடவும் சிறந்த டேப்புகளைத் தயாரிக்க முடியும் என்று கூறுகிறார்கள்.
Regarding rare information that children should know
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.