FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சேலத்தில் அமைச்சர் ஏற்றிய தேசியக்கொடி தலைகீழாக பறந்ததால் பரபரப்பு!

சேலத்தில் அமைச்சர் ஏற்றிய தேசியக்கொடி தலைகீழாக பறந்தது பற்றி...

சேலத்தில் அமைச்சர் ஏற்றிய தேசியக்கொடி தலைகீழாக பறந்ததால் பரபரப்பு - Dinamani
பகிர்:

சேலத்தில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்க விழாவில் அமைச்சர் விஜய் தமிழன் ஏற்றிய தேசியக் கொடி சிறிது நேரம் தலைகீழாக பறந்தது.

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு திடலில் மாநில அளவிலான 67 ஆவது குடியரசு நாள் தடகளப் போட்டிகள் இன்று தொடங்கின. இந்த போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தேசியக் கொடியேற்றி தொடக்கிவைத்தார்.

அவர் தேசியக் கொடியை ஏற்றியவுடன் கயிறு அறுந்து கொடி தலைகீழாக பறந்தது. இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இதனை பார்த்த அமைச்சர் பார்த்திபன், உடனடியாக தேசியக் கொடியை கீழே இறக்கி, கயிற்றில் இறுக்கமாக கொடியைக் கட்டிய பிறகு மீண்டும் ஏற்றி வைத்தார்.

பின்னர், மாவட்ட வாரியாக வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை அமைச்சர் பார்த்திபன் ஏற்றுக்கொண்டார்.

summary

Sensation in Salem as the national flag hoisted by a minister flies upside down!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments