இது தெரியுமா? நாம் வாழும் பூமியின் வயது என்ன?
குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

நாம் வாழும் பூமியின் வயது என்ன?
நம்மைப் போல பூமிக்குப் பிறந்த நாள், அத்தாட்சி (அதாவது பர்த் சர்ட்டிபிகேட்), ஆதார் அட்டை எல்லாம் கிடையாது. இருந்தாலும் உலக விஞ்ஞானிகள் பலரும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பூமியின் வயதைத் தீர்மானிக்கப் பலவகைகளிலும் முயற்சி செய்து வந்திருக்கிறார்கள், வருகிறார்கள்.
பூமியின் வயதை எப்படி கண்டுபிடிப்பார்கள் அல்லது கண்டுபிடித்தார்கள் என்ற கேள்வி எழுகிறது?
Advertisement
Advertisement
பூமியின் பல பகுதிகளிலும் இருக்கும் பாறைகளை வைத்துதான் பூமியின் வயதைக் கண்டுபிடிக்கிறார்கள். இதிலும் பல சிக்கல்கள் இருந்தன.
பழைய பாறைகள் காற்றினாலும் பல்வேறு புயல்களாலும் நீராலும் தேய்ந்து, உடைந்து போய்விடுவதால் எது மிகப் பழைய பாறை என்பதைக் கண்டுபிடிக்க இயலாத நிலை இருந்தது. இருந்தாலும் பல்வேறு புதிய புதிய உத்திகள் மூலம் உலகின் மிகப் பழைய பாறைகளை விஞ்ஞானிகள் இனம் கண்டு, பூமியின் வயதைத் தோராயமாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். கனடாவில் கிடைத்துள்ள பாறைகள் 4.03 பில்லியன் ஆண்டுகள் பழைமையானவை.
இதை வைத்து, தற்போதைக்கு பூமியின் வயது 4 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்று கணித்திருக்கிறார்கள். இன்னும் புதிதாக யாராவது கண்டுபிடித்தால், இந்த வயது இன்னும் அதிகரிக்கக்கூடும். ஏனெனில் ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.