முகப்பு
வணிகம்

சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் பெரும் வீழ்ச்சி காணப்பட்ட போதிலும் முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 56 புள்ளிகள் ஏற்றம் பெற்று 19,760 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.

Updated On : 5 ஜூன் 2013, 12:49 am IST
பகிர்:

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் பெரும் வீழ்ச்சி காணப்பட்ட போதிலும் முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 56 புள்ளிகள் ஏற்றம் பெற்று 19,760 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.

கடந்த பத்து ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீத அளவுக்குச் சரிவைச் சந்தித்ததும் பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்படக் காரணமானது.

தேசிய பங்குச் சந்தையில் 2 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 5,985 புள்ளிகளாக நிலைபெற்றது. கடந்த வாரத்தில் முக்கியமான 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் 15 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. இதில் டாடா மோட்டார்ஸ் 8.79 சதவீதமும், சன் பார்மா 7.82 சதவீதமும், ஹீரோ ஹோண்டா 5.87 சதவீதமும், கோல் இந்தியா 4.70 சதவீதமும், பிஹெச்இஎல் 3.68 சதவீதமும், ஐடிசி 2.98 சதவீதமும், என்டிபிசி 2.76 சதவீதமும், இன்ஃபோசிஸ் 2.58 சதவீதமும், ரிலையன்ஸ் 2.24 சதவீதமும், டிசிஎஸ் 2.01 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ பங்கு விலை 1.05 சதவீதமும் உயர்ந்தன. சிப்லா நிறுவனப் பங்குகள் அதிகபட்சமாக 9.25 சதவீத அளவுக்கு சரிவைச் சந்தித்தது.

Advertisement

Advertisement

டாடா ஸ்டீல் 6.81 சதவீதமும், எஸ்பிஐ 4.80 சதவீதமும், கெயில் இந்தியா 4.64 சதவீதமும், ஹிண்டால்கோ 4.52 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 4.12 சதவீதமும், மாருதி 3.81 சதவீதமும், ஜிண்டால் ஸ்டீல் 3.69 சதவீதமும், விப்ரோ பங்கு விலை 3 சதவீத அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்தன. கடந்த வாரத்தில் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் ரூ. 3,328 கோடி அளவுக்கு முதலீடு செய்தன. மும்பை பங்குச் சந்தையில் மொத்த வர்த்தகம் ரூ. 11,585 கோடி. தேசிய பங்குச் சந்தை வர்த்தகம் ரூ. 58,189 கோடியைத் தொட்டது.

ரூபாய் மதிப்பு சரிவு: டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு கடந்த வாரத்தில் கடும் சரிவைச் சந்தித்தது. இதனால் ஒரு டாலருக்கு ரூ. 56.50 தர வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த 10 மாதங்களில் ரூபாய் மதிப்பு இந்த அளவுக்குச் சரிந்தது இதுவே முதல் முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.