முகப்பு
வணிகம்

அதிகரித்து வரும் பழைய செல்போன்களின் தேவை

பயன்படுத்திய மற்றும் புதுப்பிக்கப்பட்ட செல்போன்களின் தேவை அதிகரித்து வருவதாக சர்வதேச தரவுக் கழகம் அறிவித்துள்ளது.

Updated On : 9 ஜனவரி 2021, 4:00 pm IST
அதிகரித்து வரும் பழைய செல்போன்களின் தேவை
பகிர்:

பயன்படுத்திய மற்றும் புதுப்பிக்கப்பட்ட செல்போன்களின் தேவை அதிகரித்து வருவதாக சர்வதேச தரவுக் கழகம் அறிவித்துள்ளது.

2024-ஆம் ஆண்டு பயன்படுத்திய செல்போன்களின் ஏற்றுமதி மதிப்பு 6,500 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை பயன்படுத்திய செல்போன்களின் வருடாந்திர வளர்ச்சி விகிதம்  11.2 சதவீதமாக இருக்கும் ஐடிசி எனப்படும் சர்வதேச தரவு கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

2020-ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களின் ஏற்றுமதி 225.4 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது 2019-ஆம் ஆண்டை (206.5) விட 9.2 சதவிகிதம் அதிகமாகும்.

சந்தைகளில் புதிய ஸ்மார்போன்கள் சமீபத்தில் சரிவுகளை சந்தித்து வருகின்றன. எனினும் உலக அளவில் பழைய அல்லது பயன்படுத்திய செல்போன்களின் சந்தை மதிப்பு குறைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று சர்வதேச தரவுக் கழகத்தின் ஆராய்ச்சி மேலாளர் அந்தோணி ஸ்கார்செல்லா தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்திய செல்போன்களின் மூலம் ஸ்மார்ட்போன் வாங்குவதற்கான தொகையில் பெரும்பாலான தொகை நுகர்வோரால் சேமிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

2020-ஆம் ஆண்டு வர்த்தகம் சரிவை சந்தித்திருந்தாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் பயன்படுத்திய செல்போன்களின் சந்தை மதிப்பு புதிய செல்போன்களின் மதிப்பை விட அதிகரித்து காணப்படும் என்று சர்வதேச தரவுக் கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments