முகப்பு
செய்திகள்

தன்னிடமுள்ள யானைத் தந்தங்களை வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லால் முடிவு!

நடிகர் மோகன்லால் யானைத் தந்தங்களைத் திருப்பி அளிக்கிறார்...

Updated On : 5 ஜூலை 2026, 4:24 pm IST
நடிகர் மோகன்லால்
பகிர்:

நடிகர் மோகன்லால் தன்னிடமுள்ள யானைத் தந்தங்களை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளார்.

மலையாள சினிமாவின் முகங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் மோகன்லால் கலைப்பொருள்களைச் சேகரிப்பதிலும் ஆர்வம் கொண்டவர். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு அளிக்கப்பட்ட பல கலைப்பொருள்களைப் பத்திரமாக பாதுகாத்தும் வருகிறார். அதேநேரம், அவரும் தனிப்பட்ட முறையில் வாங்கவும் செய்திருக்கிறார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனையில் மோகன்லாலிடமிருந்து யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

தொடர்ந்து, பல ஆண்டுகளாக நீடித்த வழக்கில் தற்போது வனத்துறையிடம் மன்னிப்பு கோரும் வகையில் நடிகர் மோகன்லால் தன்னிடமுள்ள 2 ஜோடி யானைத் தந்தங்கள் மற்றும் அவற்றால் செய்யப்பட்ட 13 வகை கலைப் பொருள்களைக் கேரள வனத்துறையிடம் ஒப்படைக்க விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Actor Mohanlal has decided to hand over the elephant tusks in his possession to the Forest Department.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments