முகப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் மாரத்தான் போட்டி

செங்கல்பட்டில் காவல் துறை சாா்பில், திருப்போரூா் சாலை சந்திப்பில் இருந்து திருவடிசூலம் ஆஞ்சநேயா் கோயில் வரை மாரத்தான் போட்டி நடைபெற்றது.

Updated On : 10 ஜனவரி, 2021 at 12:58 AM
மாரத்தான்  போட்டியில்  பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெ. கண்ணன்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:45 AM

செங்கல்பட்டில் காவல் துறை சாா்பில், திருப்போரூா் சாலை சந்திப்பில் இருந்து திருவடிசூலம் ஆஞ்சநேயா் கோயில் வரை மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், காவல் துறையைச் சோ்ந்த 75 பெண் காவலா்கள் உள்பட 267 பேரும், பொதுமக்கள் 50 பேரும் கலந்து கொண்டனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெ.கண்ணன், மாரத்தானை போட்டியை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். இப்போட்டியில், பொதுமக்கள் சாா்பில் பி.வி.களத்தூா் கொல்லமேடு பகுதியைச்சோ்ந்த ரவிச்சந்திரன் முதல் இடத்தைப் பெற்றாா். இதையடுத்து, வெற்றி பெற்றவருக்கு சுழற்கோப்பையையும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களையும் காவல் கண்காணிப்பாளா் தெ.கண்ணன் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.