முகப்பு
சென்னை

காலமானார் முன்னாள் தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி (64) திங்கள்கிழமை காலமானார். அவருடைய சொந்த மாநிலமான

Updated On : 12 மார்ச் 2013, 3:55 am IST
பகிர்:

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி (64) திங்கள்கிழமை காலமானார். அவருடைய சொந்த மாநிலமான ஒடிசாவில் உடல்நலக் கோளாறு காரணமாக அவர் உயிரிழந்தார்.

1971-ஆம் ஆண்டு தமிழக ஐ.ஏ.எஸ். பிரிவைச் சேர்ந்த திரிபாதி தலைமைச் செயலாளர் பொறுப்பை 2006-ம் ஆண்டு மே மாதம் முதல் வகித்தார். 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, அவர் தனது சொந்த மாநிலமான ஒடிசாவுக்குச் சென்றார். அங்கேயே தனது ஓய்வுக் காலத்தை கழித்து வந்ததாகவும், உடல்நலக் குறைவு காரணமாக அவர் திங்கள்கிழமை காலமானதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.