முகப்பு
சென்னை

தனியார் நிறுவனத்தில் தீ: ரூ.25 லட்சம் சேதம்

சென்னை போரூர் அருகே தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள

Updated On : 22 மார்ச் 2013, 5:15 am IST
பகிர்:

சென்னை போரூர் அருகே தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின.

இது குறித்த விவரம்:

போரூர் அருகே உள்ள மதனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் மௌலிவாக்கம் ஜெயலட்சுமிநகரில் ஒரு அட்டை பெட்டி தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தை சத்தியமூர்த்தி 10 ஆண்டுகளாக நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு அந்த நிறுவனத்தில் புகை வந்தது. இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள், சத்தியமூர்த்திக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சத்தியமூர்த்தி அங்கு வந்து, நிறுவனத்தின் கதவுகளைத் திறந்து பார்த்தார். அங்கு பொருள்கள் தீப் பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அவர் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர்.

இது குறித்து மாங்காடு போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்துநாசமானதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.