முகப்பு
சென்னை

போலீஸ் போல் நடித்து பணம் பறித்தவர் கைது

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீஸ் போல் நடித்து பயணியை மிரட்டி பணம் வசூலித்தவர் கைது செய்யப்பட்டார்.

Updated On : 12 ஏப்ரல் 2013, 3:19 am IST
பகிர்:

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீஸ் போல் நடித்து பயணியை மிரட்டி பணம் வசூலித்தவர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கலை சேர்ந்தவர் வேலு. இவர் கோயம்பேட்டில் ஒரு புத்தகக் கடையில் வேலை செய்து வருகிறார். வேலு கடந்த 5-ந் தேதி திண்டுக்கல் செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர் வேலுவிடம், தான் போலீஸ் எனக் கூறிக் கொண்டு, பெண்களை ஏன் கிண்டல் செய்கிறாய் எனக் கேட்டுள்ளார்.

மேலும் அந்த இளைஞர் வேலுவை மிரட்டி அவரிடமிருந்து ரூ.15 ஆயிரத்தை பறித்தாராம். பின்னர் ரூ. 500 திருப்பிக் கொடுத்து ஊருக்கு செல்லுமாறு வேலுவை அந்த இளைஞர் அனுப்பி வைத்தாராம்.

Advertisement

Advertisement

இந்நிலையில் புதன்கிழமை காலை ஊரில் இருந்து வேலு கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு திரும்பி வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அந்த இளைஞர் வேலுவிடம் ரூ.6 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.இதனால் சந்தேகம் அடைந்த வேலு, உடனடியாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

உடனே போலீஸார் வேலுவை அழைத்துக் கொண்டு கோயம்பேடு பஸ் நிலையத்தில் அந்த இளைஞரை தேடினர். அப்போது போலீஸாரை பார்த்ததும் தப்பியோட முயன்ற அந்த இளைஞரை வேலு அடையாளம் காட்டினார். அந்த இளைஞரை போலீஸார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.