FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஆடிஷன் விடியோக்களை ரசிகர்களுக்காக பகிர்ந்த நடிகை காவ்யா அறிவுமணி!

சினிமா நடிகை தேர்வுக்காக ஏராளமான விடியோக்களை எடுத்துள்ள காவ்யா அறிவுமணி, ரசிகர்களுடன் அவற்றை பகிர்ந்துள்ளது குறித்து...

Updated On : 15 ஜூன் 2026, 4:45 pm IST
நடிகை காவ்யா அறிவுமணி - இன்ஸ்டாகிராம்
பகிர்:

சினிமா நடிகை தேர்வுக்காக (ஆடிஷன்) எடுக்கப்பட்ட விடியோக்களை நடிகை காவ்யா அறிவுமணி ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

சின்ன திரையிலிருந்து சினிமாவுக்குச் செல்வதற்காக ஆடிஷனுக்காக எடுக்கப்பட்ட விடியோக்களை வீணாக்க வேண்டாம் என்ற நோக்கத்தில் இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காவ்யா பகிர்ந்துள்ளார்.

அந்த விடியோவில், வீட்டு வேலை செய்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வேளியே வரும் வேலைக்காரி போன்று வேடமிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

அந்த விடியோவில் சொந்தமாகவும் வசனம் பேசுகிறார். ''பண்டிகை காலம் என்றாலே நான் சந்தோஷமாகிவிடுவேன். ஏனென்றால், இந்த நேரத்துலதான் போனஸ் கிடைக்கும். கம்மல், புதுப்புடவை எல்லாம் கிடைக்கும்'' எனத்தொடங்கும் வசனம், குடிகார கணவன் இருப்பதைக் குறிப்பிட்டு ஏழைப்பெண்கள் படும் துயரை வெளிப்படுத்துகிறார்.

வசனம் பேசி நடிக்கும் காவ்யா அறிவுமணி - இன்ஸ்டாகிராம்

''அவன் அப்பன் சம்பாதிக்கும் காசு வீடு வந்து சேராது, மொத்தம் குடியிலேயே மூழ்கிவிடும். ஆனால், நான் சம்பாதித்துக்கொடுக்கவில்லை என்றால்'' எனக் குறிப்பிட்டு உடலில் உள்ள காயங்களைக் காட்டி நடிக்கிறார்.

''இப்படி கொடுமை செய்யும் கணவன் குறித்து போலீஸில் புகார் அளிக்கலாமே என்றால், அவரும் காசு கேட்கிறார். அங்கு கொண்டு காசை கொடுப்பதை விட என் கணவரிடமே கொடுத்துவிடுவேன். குடித்து குடித்து சீக்கிரம் தானாகவே செத்துவிடுவான்'' என காவ்யா அறிவுமணி சொந்தமாக வசனம் பேசி நடித்துள்ளார்.

இந்த விடியோவை ரசிகர்களுடன் காவ்யா பகிர்ந்துள்ளார். ஆடிஷன்களுக்காக எடுத்த விடியோக்கள் நிறைய உள்ளதாகவும், அதனை ஏன் வீணாக்க வேண்டும் என ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளதாக காவ்யா குறிப்பிட்டுள்ளார்.

இதனால், அடுத்தடுத்த பதிவில் ஆடிஷன் விடியோக்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதில் காவ்யா அறிவுமணியின் நடிப்பு அற்புதமாக உள்ளதாகவும், அடுத்தடுத்த விடியோக்களை எதிர்பார்ப்பதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆடிஷன்களுக்காக ஒரு சிலருக்காக எடுக்கப்பட்ட விடியோக்களை வீணாக்காமல், பொதுவெளியில் பகிர்வதன் மூலம் பலதரப்பட்ட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பார்வையில் படும் என்றும் இதனால் வாய்ப்புகள் உருவாகும் என்ற நோக்கத்துடனும் காவ்யா அறிவுமணி பகிர்ந்து வருவதாக ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

summary

Serial actress Kavya arivumani shares audition video goes viral

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments