முகப்பு
சென்னை

ஸ்ரீ ராமநவமி: ஷீரடி சாய்பாபா கோயில்களில் சிறப்பு பூஜைகள்

ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு அம்பத்தூர்,விநாயகபுரத்தில் உள்ள ஸ்ரீ சாய்நாத் மந்திர் கோயிலிலும், புரசைவாக்கம் படவட்டம்மன் கோயிலில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா சந்நதியிலும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

Updated On : 12 ஏப்ரல் 2013, 3:39 am IST
பகிர்:

ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு அம்பத்தூர்,விநாயகபுரத்தில் உள்ள ஸ்ரீ சாய்நாத் மந்திர் கோயிலிலும், புரசைவாக்கம் படவட்டம்மன் கோயிலில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா சந்நதியிலும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

சிறப்பு பூஜைகளுடன் அபிஷேக ஆராதனைகள், பஜனைகள் மற்றும் அன்னதானமும் நடைபெற உள்ளன. இந்தக் கோயில்களில் சாய்பாபாவை குழந்தையாகப் பாவித்து தொட்டிலில் போடும் சிறப்பு நிகழ்ச்சி ஏப்ரல் 17ஆம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.

சாய்பாபாவின் பிறந்தநாளான ஏப்ரல் 19ஆம் தேதியன்று சாய் பஜனைகளும், பாபா ஊர்வலமும் நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.