முகப்பு
சென்னை

ஆட்டோ டிரைவர் கொலை

கொடுங்கையூர் அருகே ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் சில ரௌடிகளை தேடி வருகின்றனர்.

Updated On : 2 மே, 2013 at 5:09 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:09 PM

கொடுங்கையூர் அருகே ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் சில ரௌடிகளை தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது:

எருக்கஞ்சேரி சூழ்புனைகரை பண்டித தெருவைச் சேர்ந்தவர் சே. சரவணன் (32). இவர் ஆட்டோ டிரைவர். இவர் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது அங்கு வந்த எருக்கஞ்சேரியைச் சேர்ந்த ரௌடி கோபி என்ற முட்டை கோபி, அவரிடம் பேச வேண்டியிருப்பதாகக் கூறி வெளியே அழைத்துச் சென்றாராம்.

Advertisement

பின்னர் சரவணன், கோபி மற்றும் அவரது நண்பர்களுடன் மாதவரம் தொழிற்பேட்டை அருகே பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது கோபி தரபுக்கும் சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

தகராறு முற்றவே அந்தக் கும்பல் சரவணனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சரவணன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு புதன்கிழமை அதிகாலை சரவணன் உயிரிழந்தார்.

இது குறித்து கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கோபி, மாதவரத்தைச் சேர்ந்த மகேஷ், அசோக், கொடுங்கையூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.

கோபிக்கும், இறந்த சரவணனுக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாம். அதன் காரணமாகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

தீவுத்திடல் மீன் வளத் திருவிழா:

பெண்களுக்கு மீன் உணவுப் போட்டி

சென்னை, மே 1: சென்னை தீவுத்திடலில் தொடங்கவுள்ள மீன்வளத் திருவிழாவில் சமையல் கலை பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் இல்லத் தரசிகளுக்கு மீன் உணவு சமையல் போட்டியை தமிழக அரசு நடத்த உள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தின் முதல் மீன்வளத் திருவிழா மே 9 முதல் 12-ஆம் தேதி வரை சென்னை தீவுத் திடலில் மீன்துறை மூலம் நடத்தப்படவுள்ளது. இந்தத் திருவிழாவில் மீன் சமையல் போட்டி முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது.

பெண்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு மே 11-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கும், சமையல் கலை பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு அன்று மாலை 4 மணிக்கும் போட்டி நடத்தப்படும். போட்டிக்கான நேரம் 60 நிமிடங்கள். இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் போட்டிக்கான விண்ணப்பத்தினை மீன் துறை இயக்குநர், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரியில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். அல்லது இணையதள (ஜ்ஜ்ஜ்.ற்ய்ச்க்ஸ்ரீப்ற்க்.ஸ்ரீர்.ண்ய்ற்ஹய்ச்ண்ள்ட்2013) முகவரியில் இருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் மே 7. மேலும் விவரங்களுக்கு 9976315138, 8754783675, 9843462653 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.