மருத்துவமனையில் ஜி.கே.மணி அனுமதி
பாமக தலைவர் ஜி.கே.மணி முதுகுதண்டு வலி காரணமாக சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி முதுகுதண்டு வலி காரணமாக சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த சில நாள்களாக ஜி.கே.மணி முதுகு தண்டு வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை காலை சென்னையில் உள்ள அவர் வீட்டில் இருந்தபோது மயக்கம் ஏற்பட்டுள்ளது.
அவரது குடும்பத்தைச் சார்ந்தோர் உடனடியாக அவரை சேத்துப்பட்டில் உள்ள மேத்தா மருத்துவனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.