முகப்பு
சென்னை

பி.எஸ்.என்.எல். பேன்ஸி நம்பர்: இன்றுமுதல் ஆன்-லைன் ஏலம்

பி.எஸ்.என்.எல். லேண்ட் லைன் இணைப்புகளுக்கு பேன்ஸி நம்பர்கள் பெற ஆன்-லைன் மூலம் ஏலம் கோரலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Updated On : 12 ஜூலை 2013, 5:33 am IST
பகிர்:

பி.எஸ்.என்.எல். லேண்ட் லைன் இணைப்புகளுக்கு பேன்ஸி நம்பர்கள் பெற ஆன்-லைன் மூலம் ஏலம் கோரலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கான ஏலம் வெள்ளிக்கிழமைமுதல் (ஜூலை 12) தொடங்க உள்ளதாகவும் பி.எஸ்.என்.எல் (சென்னை வட்டம்) தெரிவித்துள்ளது.

இது குறித்து பி.எஸ்.என்.எல். (சென்னை வட்டம்) வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னைக்குள்பட்ட பகுதிகளில் லேண்ட் லைன் இணைப்புகளுக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்கள், பழைய எண்களை மாற்றி பேன்ஸி நம்பர் பெற விரும்புவர்கள், ஆன்-லைன் மூலம் ஏலம் கோரலாம்.

Advertisement

Advertisement

ஜ்ஜ்ஜ்.ங்ஹன்ஸ்ரீற்ண்ர்ய்.க்ஷள்ய்ப்.ஸ்ரீர்.ண்ய் என்ற இணையதள முகவரியில் உள்ள பேன்ஸி நம்பர்களில் விருப்பமானவற்றை தேர்வு செய்து ஏலம் கோர வேண்டும். தேர்வு செய்யும் ஒவ்வொரு நம்பருக்கும் தலா ரூ.100 பதிவுத் தொகையாக செலுத்த வேண்டும். இந்தத் தொகை திருப்பித் தரப்பட மாட்டாது.

இதை தவிர விருப்பமான எண்களுக்கான ஏலத் தொகையையும் குறிப்பிட வேண்டும். அதிகத் தொகைக்கு ஏலம் கோரியுள்ளவருக்கு அந்த எண் வழங்கப்படும். பேன்ஸி நம்பர்களுக்கு 12-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை ஆன் - லைனில் ஏலம் கோரலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.