முகப்பு
சென்னை

டிராவல்ஸ் அதிபர் வீட்டில் தங்கநகை, பணம் திருட்டு

சென்னை வில்லிவாக்கத்தில் டிராவல்ஸ் அதிபர் வீட்டில் தங்கநகை, பணம் திருடப்பட்டது தொடர்பாக பக்கத்து வீட்டு பெண் கைது செய்யப்ப்டடார்.

Updated On : 2 ஆகஸ்ட் 2013, 4:37 am IST
பகிர்:

சென்னை வில்லிவாக்கத்தில் டிராவல்ஸ் அதிபர் வீட்டில் தங்கநகை, பணம் திருடப்பட்டது தொடர்பாக பக்கத்து வீட்டு பெண் கைது செய்யப்ப்டடார்.

அயனாவரம் கொன்னூர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் மனைவி சொர்ணலதா. சந்திரசேகர் ஒரு டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். சொர்ணலதா ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இத் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளன.

தம்பதியினர் புதன்கிழமை காலை பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பிவிட்டு அலுவலகத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். சொர்ணலதா வழக்கம்போல வீட்டு சாவியை, அங்கு செருப்பு வைக்கும் இடத்தில் மறைத்து வைத்துச் சென்றார்.

Advertisement

Advertisement

இந்நிலையில் மாலையில் சொர்ணலதா வீட்டுக்கு திரும்பி வந்தார். கதவு பூட்டு திறக்கப்பட்டு, பீரோவில் இருந்த 26 பவுன் தங்கநகை, ரூ.44 ஆயிரம் பணம் ஆகியவை

திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர், அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் சொர்ணலதா மறைத்து வைத்திருந்த சாவியை பயன்படுத்தியே வீட்டு பூட்டையும், பீரோவின் பூட்டையும் திறந்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில் சொர்ணலதா வீட்டின் அருகே வசிக்கும் பிரேமலதா என்பவர்தான் தங்கநகையையும், பணத்தையும் திருடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் பிரேமலதாவை கைது செய்து, அவரிடமிருந்த நகையையும், பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.