முகப்பு
சென்னை

தேசியத் திடக்கழிவு மேலாண்மைக் கருத்தரங்கு

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் ஜி.கே.எம்.பொறியியல் கல்லூரியும்,மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு மையமும் இணைந்து நடத்திய தேசிய அளவிலான திடக்கழிவு மேலாண்மைக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

Updated On : 2 செப்டம்பர், 2013 at 3:09 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் ஜி.கே.எம்.பொறியியல் கல்லூரியும்,மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு மையமும் இணைந்து நடத்திய தேசிய அளவிலான திடக்கழிவு மேலாண்மைக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தின் ரசாயன பொறியியல் துறை முதுநிலை தொழில்நுட்ப இயக்குநர் என்.வேதராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

"தோல் தொழில் துறையில் கழிவுப்பொருட்களைக் கையாள்வதில் எதிர்நோக்கும் சவால்களும் வாய்ப்புகளும்' என்ற தலைப்பில் தோல் தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் கழிவுகள் மறுசுழற்சி முறை மூலம் எவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறது என்பது குறித்து அவர் விளக்கினார். மத்திய தோல் ஆராய்ச்சி மையம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் எஸ்.வி.ஸ்ரீனிவாசன் தோல் தொழிற்சாலைக்கழிவு மூலம் மின்உற்பத்தியும்,சுத்திகரிக்கும் தொழில்நுட்பமும் என்ற தலைப்பில் தோல் தொழில்துறையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் நவீன முறை குறித்து பேசினார்.

Advertisement

ஜி.கே.எம்.பொறியியல் கல்லூரி இயக்குனர் ஜெகநாதன்,முதல்வர் என்.ராமராஜ்,இயந்திரவியல் துறை டீன் டி.தாமஸ் கோயில்ராஜ், துறைத்தலைவர் என்.பி.கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.