FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

Updated On : 14 ஜூன் 2026, 10:46 pm IST
அமெரிக்க அதிபர் டிரம்ப் - ஈரானிய தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி. - கோப்புப் படம்
பகிர்:

அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: செங்கோட்டையன்

அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல் என்றும் இன்னும் பல உறுப்பினர்கள் தவெகவில் இணைவார்கள் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (ஜூன் 14) தெரிவித்தார்.

மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழா மதுராந்தகத்தில் இன்று (ஜூன் 14) நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் செங்கோட்டையன், என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உதயநிதி சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ் கேள்வி

தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா என இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழா மதுராந்தகத்தில் இன்று (ஜூன் 14) நடைபெற்றது. இதில், பேசிய ரமேஷ், நடிகராக இருக்கும்போது, உச்ச நடிகராக இருந்தபோது அதனை துறந்துவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார். ரசிகர் மன்றங்களை மக்கள் அமைப்பாக மாற்றி மக்களோடு மக்களாக சேவை செய்து முதல்வராகியுள்ளார் விஜய் என்றார்.

மக்களை நாய் என்றேனா? என் தாய்க்கு இணையானவர்கள் : ராகவா லாரன்ஸ்

மக்களையும் ரசிகர்களையும் நாய்களுடன் ஒப்பிடவில்லை என நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று (ஜூன் 14) விளக்கம் அளித்துள்ளார்.

தனது வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் சமீப காலமாக அறிவித்து வருகிறார். இது தொடர்பான சென்னையில் செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில் தவெக அரசுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.

இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு

இந்தியாவின் மரபணுவிலேயே (டிஎன்ஏ) புதுமைகள் பொதிந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 14) தெரிவித்தார்.

பிரான்ஸில் பாரத் இனோவேட்ஸ் எனும் 3 நாள் நிகழ்வை தொடக்கிவைத்துப் பேசும்போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இயந்திரக் கோளாறால் ஓமன் கடல் பகுதியில் நின்ற கப்பல்: இந்திய மாலுமிகள் 14 பேர் மீட்பு!

ஓமன் கடல் பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக நின்றுகொண்டிருந்த கப்பலில் இருந்து 12 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதித் திட்டம் தீட்டியது யார்? - அமைச்சர் செங்கோட்டையன்

summary

திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதித் திட்டம் தீட்டியது யார்? என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சேலம் வல்லுறவு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் நாளை (ஜூன் 15) 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஜூன் 15: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்

உலகளவில் இரண்டாமிடம்... ரஷியாவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா!

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில், இந்தியா உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா!

பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.

உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையில் தவெக அரசு சமரசம் செய்யக்கூடாது: நயினார் நாகேந்திரன்

உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையில் தவெக அரசு சமரசம் செய்யக்கூடாது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ்

நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்

summary

பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!

அதிமுகவில் இருந்து விலகுவதாக அந்தக் கட்சியின் கொள்கைப் பரப்பு துணைச் செயலர் நடிகை கெளதமி அறிவித்துள்ளார்.

கண்ணூர் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை

கண்ணூர் விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி

மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மின்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜூன் 17, மாலை 6 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

46 ஆண்டுகளாக போஸ்டர் ஒட்டும் தொழிலாளி! நெகிழ்வின் தருணங்கள்!

தற்போதைய நவீன, வளர்ச்சியடைந்த காலத்தில் சில தொழில்கள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. அவ்வாறு செல்லும் தொழில்களில் ஒன்றான சுவரொட்டி ஒட்டும் தொழிலை மேற்கொள்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், விழுப்புரம் நகரத்தில் சுவரொட்டிகளை ஒட்டும் பணியை கடந்த 46 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார் ஆர்.எம். சந்திரசேகரன் (64).

சென்னை, புறநகரில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!

பிரான்ஸில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் ஜூன் 17 ஆம் தேதி இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளனர்.

சென்னை - குருவாயூர், திருச்சி - திருவனந்தபுரம் ரயில் சேவைகளில் மாற்றம்!

பொறியியல் பணிகள் காரணமாக குருவாயூர் ரயிலின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.

சொல்லப் போனால்... நிலைத்திருக்கும் அந்தக் கற்சிற்பத்தின் குரல்!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவைப் பற்றி இனிப் புதிதாக எழுதுவதற்கோ, பேசுவதற்கோ எதுவுமில்லை என்கிற அளவுக்கு, அவர் மறைவைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களாக சகலவிதமான ஊடகங்களிலும் எண்ணற்றோர் எழுதியும் பேசியும் குவித்துவிட்டார்கள். ஆனாலும், அதிகாலைப் பெருவெள்ளமாகப் புகுந்து பெருக்கெடுத்துத் தமிழ்த் திரையுலகைப் புரட்டிப் போட்டவரை எவ்வாறு எழுதாமல் இருக்க முடியும்?

இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்

summary

‘அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம், ஞாயிற்றுக்கிழமை கையொப்பமாகும்’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து ஹோா்முஸ் நீரிணை உடனடியாக திறக்கப்படும் எனவும் உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments