முகப்பு
சென்னை

தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு

சென்னையில் பெய்த கனமழையால் சாலையில் தேங்கிய மழை வெள்ளத்தால் பல பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Updated On : 12 செப்டம்பர் 2013, 4:42 am IST
பகிர்:

சென்னையில் பெய்த கனமழையால் சாலையில் தேங்கிய மழை வெள்ளத்தால் பல பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை காலை வரையில் பெய்த கனமழையின் காரணமாக சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வடபழனி, போரூர், கோயம்பேடு, ஜவாஹர்லால் நேரு சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கான்ரான் ஸ்மித் சாலை, சூளைமேடு, பாடி, நெல்சன் மாணிக்கம் சாலை, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் சென்னையில் உள்ள பல்வேறு சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கியது.

இதனால் அந்தப் பகுதிகளில் புதன்கிழமை காலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிóட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதிகளவில் மழை நீர் தேங்கிய இடங்களில் மாநகராட்சிப் பணியாளர்கள் இயந்திரங்கள் உதவியுடன் அகற்றினர். பிற்பகலுக்குப் பின்னர் போக்குவரத்து ஓரளவு சீரானது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.