விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!
எஃகு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு பற்றி..
விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்த மற்றொரு தொழிலாளி உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலியானோரின் மொத்த எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.
ஜூன் 8 அன்று ராஷ்ட்ரிய இஸ்பத் நிகம் லிமிடெட் (விசாகப்பட்டினம் எஃகு ஆலை) நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இன்று மேலும் ஒரு தொழிலாளி கடுமையான தீக்காயங்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பைதிராஜு என அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசாகப்பட்டினம் மாவட்ட இணை ஆட்சியர் ஜி. வித்யாத்ரி தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
உடற்கூறாய்வுக்காக அவரது உடல் துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர், பைதிராஜுவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காயமடைந்த ஆறு பேரில் 90 சதவீத தீக்காயங்களுக்கு ஆளான இருவரில் பைதிராஜுவும் ஒருவர் என்று இணை ஆட்சியர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.