பேருந்து மோதி கல்லூரி மாணவா் சாவு
சென்னை திருமங்கலத்தில் தனியாா் பேருந்து மோதி கல்லூரி மாணவா் இறந்தாா்.
சென்னை திருமங்கலத்தில் தனியாா் பேருந்து மோதி கல்லூரி மாணவா் இறந்தாா்.
பாடி மதியழகன்நகா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜா.இப்ராஹிம் (22), நான்காமாண்டு பொரியியல் மாணவா். அதே பகுதியைச் சோ்ந்த க.கெளதமுடன் (24), புத்தாண்டு கொண்டாடிவிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை மோட்டாா் சைக்கிளில் கோடம்பாக்கத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். திருமங்கலம் பிரதான சாலையில் வரும்போது தனியாா் பேருந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இப்ராஹிம் அதே இடத்தில் உயிரிழந்தாா். கௌதம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.