முகப்பு
வணிகம்

அட்டகாசமான காமெரா, விலையில் வரும் ஷாவ்மி 17T - முழு விவரம்

அட்டகாசமான காமெரா, விலையில் வரும் ஷாவ்மி 17T பற்றிய முழு விவரம்

Updated On : 29 ஜூன் 2026, 1:37 pm IST
பகிர்:

புதிய செல்போன் வாங்க வேண்டும், அதிலும் அட்டகாசமான காமெரா, குறைந்த விலையில் வாங்க வேண்டும் என தேடிக் கொண்டிருப்பவர்களுக்கான சிறந்த தெரிவாக ஷாவ்மி 17டி அமைந்திருக்கும் என்கிறார்கள்.

ஏற்கனவே தவறவிட்ட தன்னுடைய முன்னணி இடத்தை மீண்டும் பிடிக்கும் வகையில் ஷாவ்மி இந்த செல்போனை அறிமுகப்படுத்துகிறது என்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக ரெட்மி நோட் வரிசை செல்போன்களைப் பயன்படுத்திவந்தவர்களுக்கு அதற்கு சரியான மாற்று செல்போன் இதுவரை கிடைக்கவில்லை. பல்வேறு காரணங்களால், செல்போன் விலைகள் சற்று அதிகரித்ததும் இற்குக் காரணம்.

Advertisement

Advertisement

ரெட்மி நோட் வரிசை செல்போன்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளியில் மிகச் சரியாக நிரப்ப வருகிறது ஷாவ்மி 17டி வரிசை.

அண்மைக் காலமாக அறிமுகமான செல்போன்களின் விலையை விட இது சற்று குறைவாகக் காணப்படும். ப்ரீமியம் வசதிகளுடன் அண்மையில் வெளியான விவோ எக்ஸ்300 FE, ஒப்போ ஃபைன்ட் X9s ஒப்பிடும்போது விலை குறைவாம்.

சிறப்பம்சங்கள் என்ன?

Xiaomi 17T ஆனது 1.5K ரெசல்யூஷன் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதம் (refresh rate) கொண்ட 6.59 அங்குல AMOLED திரையுடன் வருகிறது.

இது MediaTek Dimensity 8500-Ultra சிப்செட் மூலம் இயக்கப்படும். 12GB வரை ரேம் (RAM) மற்றும் 512GB சேமிப்பு வசதியை வழங்குகிறது. இதன் கேமரா அமைப்பில் 50MP முதன்மை சென்சார், 5x ​​ஆப்டிகல் ஜூம் வசதி கொண்ட 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 12MP அல்ட்ரா-வைட் லென்ஸ் ஆகியவை அடங்கும். மேலும், இது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 6500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

summary

Xiaomi 17T with an amazing camera, price – full details

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments